நிவர் புயல் காற்றால் பிரபல இயக்குனர் கண்ணனின் கார் மீது மரம் விழுந்து சேதமடைந்துள்ளது.
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயலால் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதிதீவிர புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது .
மேலும் வேகமான காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்து சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கண்ணனின் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரின் மீது மரம் விழுந்து சேதமடைந்துள்ளது.