வாழைப்பழம் கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 1
கோதுமை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
ரவை – 1/4 கப்
வெல்லம் – 1/3 கப்
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் வாழைப் பழத்தை எடுத்து தோல் நீக்கி, துண்டுகளாக்கியபின் மத்தால் நன்கு மசித்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில்கடாயை வைத்து அதில்வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கரைந்ததும் இறக்கி ஆற வைத்ததும்,சுத்தமாக வடிகட்டி மசித்த வாழைப்பழத்துடன் சேர்க்கவும்.
மேலும் அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, சிறிதளவு உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து, அப்படியே அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை சுற்றிலும் தடவியபின், கலந்து வைத்த மாவை ஊற்றி தோசைகளாக சுற்றி வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு,தோசையின் சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும், எடுத்து பரிமாறினால் ருசியான வாழைப்பழம் கோதுமை தோசை ரெடி.