புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் அதி தீவிர புயலாக மா கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் கரையை கடக்கிறது. முழுதாக புயல் கரையை கடந்த நள்ளிரவு 3 மணி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.