நடிகர் அமிதாப் பச்சன் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
76 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது துல்லியமான நடிப்பால் ரசிகப்பெருமக்களை கட்டிப்போட்டவர் . அவருக்கு திடீரென நேற்று உடல்நிலை பாதித்ததால் , அவருடைய ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் படுக்கையில் இருக்கிறேன். கவலைப்பட ஒன்றும் இல்லை. இதை அனைவரிடமும் தெரிவியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார் .