சர்ச்சைக்கு பெயர் போன நபர் ஒருவர் தனது 6 கர்ப்பிணி மனைவிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.
நைஜீரியா நாட்டில் நகைச்சுவை நடிகர் Williams Uchempa க்கும், Brunella என்ற நடிகைக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு நைஜீரிய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன சமூக வலைதளம் மூலம் பிரபலமான pretty Mike தன்னுடைய 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். நைட் கிளப் உரிமையாளரான இவருடைய உண்மையான பெயர் Mike Eze-Nwalie ஆகும்.
நாளடைவில் அவருடைய பெயர் Pretty Mike என்று பிரபலமானதால் சமூக வலைதளம் மூலம் அதையே வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவியுடன் திருமணத்திற்கு சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ஒரு சிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். கடந்த வருடம் செப்டம்பரில் ஐந்து பெண்களுடன் திருமண உடைகளில் இருப்பது போன்று புகைப்படம் வெளியிட்ட போது, அதில் இருவர் தன்னுடைய முன்னாள் மனைவிகள் என்றும், மற்ற 3 பேர் தற்போதைய காதலிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் நிறைய திருமணம் செய்வது என்னுடைய கனவு.
நம் அனைவருக்கும் கனவுகள் உள்ளன, கற்பனைகளும் உள்ளன என்று கூறி பிரபலமானார். இதுபோன்று இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளதால் இவருக்கு சர்ச்சைக்கு பெயர் போன பெயர் போன சமூகவலைதள பிரபலம் என்று அங்கிருக்கும் உள்ளுர் ஊடகங்கள் கூறியுள்ளன.