புயல் கரையை கடந்த நிலையிலும் கன மழை பெய்து கொண்டிருப்பதால் சென்னையில் பிரதான சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
புயலால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. எண்ணூர் விரைவு சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை சாலை, ஈசிஆர், பழைய மாமல்லபுரம் சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படும். மேலும் தடையை மீறி செல்லும் மக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.