தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
புயல் கரையை கடந்த நிலையிலும் புயலின் செய்த விவரங்களை பற்றி முதல்வர் பழனிசாமி பிறகு வெளியிடுவார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். நேற்று காலை 8.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை கடலூரில் 24.6 சென்டி மீட்டர் மழையும், புதுச்சேரியில் 23.7 சென்டி மீட்டர் மழையும், சென்னையில் 8.9 சென்டி மீட்டர் மழையும், காரைக்காலில் 8.6 சென்டி மீட்டர் மழையும், நாகையில் 6.3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.