செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாயம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அனைத்து இடங்களிலும் உள்ள நீர் இருப்புகளில் தண்ணீர் நிரம்பியது. அதன்படி செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதால், அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் புயல் கரையை கடந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு மேலும் 2 ஆயிரம் கன அடி குறைக்கப்பட்டு, ஏரியில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் அடையாறு ஆற்றிலும் படிப்படியாக வெள்ள அபாயம் குறைந்து கொண்டே வருகிறது.