பிரபல நிறுவனம் ஒன்று ஆடையில் பிள்ளையார் படம் பதித்தற்காக இந்திய தூதரகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனமான ஜான் காட்டெர் தயாரித்துள்ள உடையில் விநாயகரின் படங்கள் பதிக்கப்பட்ட்டுள்ளதால் தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஷார்ட்ஸ் ஆடையில் விநாயகரின் படத்தை பதித்து கடவுளின் புனிதத்தை அவமதித்து விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆடையில் விநாயகர் படத்தை பதித்தது குறித்த உணர்வுபூர்வமான பிரச்சினைகள் குறித்து ஜான் காட்டெர் நிறுவனத்திடம் பிரேசிலின் இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக ஆடையிலிருந்து விநாயகர் படங்கள் நீக்குவதாகவும், ஏற்கனவே கடைகளுக்கு அனுப்பப்பட்ட அனைத்து ஆடைகளையும் திரும்ப பெறுவதாகவும் ஜான் காட்டெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விநாயகரின் படம் பதித்த ஆடைகளை தயாரிப்பதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் ஜான் காட்டெர் நிறுவனம் சார்பாக நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் விநாயகர் கடவுளை அவமதிக்கும் எண்ணத்தில் பயன்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பிள்ளையாரின் படங்கள் நீக்கவும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ள உடைகளை திரும்பப் பெறவும் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.