மதுரையில், நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்பியபோது மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் கமுதி அருகே பாப்பணம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா ,மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்ப பேருந்தில் வந்ததாக கூறப்படுகிறது .
இந்நிலையில் , திருப்புவனம் பேருந்தில் வந்தபோது மயக்கமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி சந்தியா உயிரிழந்தார்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.