காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வீட்டு பூட்டை உடைத்து 40 சவரன் நகை ,50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த இளங்கோவன் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது .
40 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், பீரோவின் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் .