Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

crab pepper மசாலா… சுவைக்க சுவைக்க திகட்டாது…!!!

நண்டு                                – 500 கி
பெரிய வெங்காயம்   – 1
தக்காளி                           – 2
மஞ்சள் தூள்                   – ½ தேக்கரண்டி
உப்பு                                   – தேவையான அளவு
அரைக்க தேவையானவை: 
தேங்காய்                        – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய்          – 2 அல்லது 3
பூண்டு                              – 15 பல்
மிளகு                                – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு                             – 1 தேக்கரண்டி
கசகசா                             – 1 தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை                             – சிறிய துண்டு
கல் பாசி                         – சிறிது
சோம்பு                            – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை            – 1  கொத்து
எண்ணெய்                   – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் நண்டின் ஓட்டை நீக்கி விட்டு, அதனை நன்றாக தண்ணீரில் கழுவி , தேவையான சைஸில் துண்டுகளாக்கி கொள்ளவும்.
பின் அரைக்க கொடுத்துள்ளவற்றை, சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி அரைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து, பின் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வேக விடவும். இடையிடையே  கிளறி, நண்டு நன்கு வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும், அடுப்பை அணைத்து இறக்கவும். இப்போது சுவையான நண்டு மிளகு மசாலா சாப்பிட தயார்.

Categories

Tech |