Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்ல உள்ள டம்மி பீசுகள வெளிய அனுப்புங்க… வாங்க நாம உள்ள போவோம்… டுவிட்டரில் உரையாடிய பிரபலங்கள்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் சுவாரசியமாக இல்லை என இரு  பிரபலங்கள் ட்விட்டரில் உரையாடியுள்ளனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4-வது சீசன் 50 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சீசன்களில் இருந்த  சுவாரஸ்யம்  இந்த சீசனில்  சற்று குறைவாக உள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆவேசமாக பொங்கி எழும் போட்டியாளர்கள் அடுத்த நிமிடமே மன்னிப்பு கேட்டு விடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து திரையுலக பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸில் உள்ள அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள், அவர்களால் பிரயோஜனம் இல்லை என நடிகர் பரத் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் பிரேம்ஜி, நாம ரெண்டு பேரும் உள்ளே செல்வோமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களின் உரையாடலுக்கு ரசிகர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |