டிசம்பர் 1ஆம் தேதிக்கு முன்னரே மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு முடிவடைந்து, மருத்துவ கலந்தாய்வில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்தே டிசம்பர் 1ஆம் தேதிஅல்லது அதற்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு சமூக இடைவெளி விட்ட பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் மாணவர்கள், கல்லூரிகளில் இடம் கருத்து கேட்டு டிசம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு கல்லூரிகளை திறக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த நிலையில் அரசு உத்தரவிட்டுள்ளது.