Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 28ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

புயலால் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் புயலைத் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழை, வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சூழ்ந்து காணப்படும் வெள்ள நீர், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகின்ற 28 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |