நடிகை தமன்னா கமர்ஷியல் படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்துள்ளது பற்றி விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலக பிரபல நடிகை தமன்னா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர். இதுவரை தமன்னா அதிகமாக கமர்ஷியல் படங்களில் தான் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கமர்ஷியல் படங்களில் கதாநாயகிகள் பங்கு மிகக் குறைவு . ஆனால் அதிலும் நமது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். இது மிகவும் சவாலான விஷயம்.
நான் எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நன்றாகவே பயன்படுத்தினேன். அதிக பெயரும் புகழும் வரவேண்டும் என கடுமையாக உழைத்தேன். அதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் நீடித்து இருக்க முடிகிறது. மேலும் ‘வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது அவசியமல்ல , அதில் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்’ என கூறியுள்ளார்.