Categories
மாநில செய்திகள்

நிவர் புயலால் கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

புயலின்போது சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவரின் மீது மரம் விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில் புயலின் தாக்கத்தால் சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது சாலையோரம் இருந்த மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |