Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு…அதிகம் பிடித்த… இந்த ஐஸ் க்ரீமை… செய்து கொடுத்து அசத்துங்க..!!

கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்ய தேவையான பொருள்கள்:

பால்                                      – 500 மில்லி
சர்க்கரை                            – 125 கிராம்
முட்டை                             – 3
கஸ்டர்டு பவுடர்            – 5 மேசைக்கரண்டி
ப்ரெஸ் க்ரீம்                    – 5 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ்       – 3 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் முட்டையை எடுத்து வெள்ளை கரு,மஞ்சள் கரு என்று தனித்தனியாக பிரித்து எடுத்து வைக்கவும். பின்பு முட்டையில் உள்ள மஞ்சள்கருவோடு, பால், கஸ்டர்டு பவுடர், சர்க்கரை, சேர்த்து நன்கு கலந்த்து நுரை பொங்கும் வரை அடிக்கவும்.

பின்பு  அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து, அதில் கலந்து வைத்த பால் கலவையை சேர்த்து, கொதிக்கும் வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். மேலும் கொதிக்க வைத்த கலவையானது நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

பிறகு கெட்டியான பால் கலவையை எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சில மணி நேரம் கழித்து நன்கு உறைந்ததும், குளிர்ந்த கலவையை  வெளியில் எடுத்து, அதனுடன் முட்டையில் உள்ள வெள்ளை கருவை சேர்த்து நன்கு நுரை பொங்கும் வரை அடித்து கொள்ளவும்.

மேலும் அதனுடன், ப்ரெஸ் க்ரீமையும், வெனிலா எசன்ஸையும் சேர்த்து கலக்கி, மறுபடியும் நன்கு கலந்து பிரிட்ஜில் வைத்து கெட்டியானதும், எடுத்து பரிமாறினால் ருசியான கஸ்டர்டு ஐஸ் க்ரீம் ரெடி.

Categories

Tech |