மண்ணில் புதைக்கப்பட்ட மரநாய் விலங்குகள் மீண்டும் வெளியே தெரிய தொடங்கியதால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக பல மில்லியன் mink என்னும் மரநாய் வகைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனை கொல்லும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தொகையும், அவை 10 நாட்களுக்குள் புதைக்கப்பட்டால் போனஸ் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி சலுகையாக கொடுக்கப்பட்ட தொகையால் தான் இப்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விவசாயிகள் mink விலங்குகளை கொன்று லேசான மண்ணைத் தோண்டி புதைத்து வைத்துள்ளனர்.
இதனால் தற்போது இவை மீண்டும் மண்ணில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கியுள்ளது. மண்ணில் புதைக்கப்பட்ட விலங்குகள் அழுக ஆரம்பித்துவிட்டதால் அவற்றிலிருந்து வாயுக்கள் உருவாகத் தொடங்கி, உடல் வீங்கி மண்ணில் இருந்து வெளியே தொடங்கியுள்ளதால் மீண்டும் இவற்றை ஜேசிபி எந்திரம் கொண்டு புதைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விலங்குகளால் மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து சமூக ஊடங்களில் ரத்தக் காட்டேரிகள் வரத் தொடங்கிவிட்டன என்று மக்கள் வேடிக்கையாக செய்தி வெளியிட்டு வருகின்றனர்.