Categories
அரசியல் மாநில செய்திகள்

“சேவை செய்ய வேண்டும் என்று வரவில்லை”,தேர்தலுக்காக வருகிறார் ஸ்டாலின் – ராஜேந்திர பாலாஜி

சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை ஸ்டாலின் பார்வையிடுவது இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று தெரிவித்தார்.

சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை ஸ்டாலின் பார்வையிடவில்லை என்றும், தேர்தல் வருவதால்  வருகிறார் என்றும் ராஜேந்திர பாலாஜி  ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

Categories

Tech |