தென் தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த புயலைப் பற்றி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நவம்பர் 24ஆம் தேதி உருவான புயல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது. இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதியன்று புதிய புயல் வங்க கடலில் உருவாகி இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29-ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தென் தமிழகத்தை நோக்கி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.