ஆப்பிள் சோடா செய்ய தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 1
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்
சோடா – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஆப்பிளை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸிஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
பின்பு வடிக்கட்டிய ஆப்பிளுடன்,சிறிதளவு லுமிச்சைச் சாறு, தேன் கலந்து பிரிட்ஜில் வைத்து சில மணி நேரம் கழித்து நன்கு குளிரும் வைக்கவும்.
பின்னர் குளிர்ந்த ஆப்பிளை எடுத்து, அதனுடன் சோடா சேர்த்து நன்கு கலந்தபின், பரிமாறினால் ருசியான ஆப்பிள் சோடா ரெடி.