Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிரடியான சுவையில்…அசைய பிரியர்களுக்கு பிடித்த… காடை வறுவல் ரெசிபி..!!

காடை வறுவல் செய்ய தேவையான பொருள்கள்:

காடை                                  – 4
எலுமிச்சைசாறு              – 2 ஸ்பூன்
சோள மாவு                        – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை                 – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது    – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்                      – அரை ஸ்பூன்
கரம்மசாலாத்தூள்          – 2 ஸ்பூன்
தயிர்                                       – 2 ஸ்பூன்
மிளகாய் தூள்                     – 2 ஸ்பூன்
எண்ணெய்                           – தேவையான அளவு
சாட் மசாலா                        – சிறிதளவு
உப்பு                                        – தேவையான அளவு

செய்முறை:

காடையை முதலில் எடுத்து  1 காடையை 4 துண்டாக நறுக்கி எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் இஞ்சி, பூண்டை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

அதன் பின்பு  பாத்திரத்தில் துண்டுகளாக்கபட்ட காடையை போட்டு, அதில் எலுமிச்சைசாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், தயிர், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கலந்தபின், அதன் மேல் சோள மாவை தூவி நன்கு கலந்து எடுத்து  சில மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

*பிறகு அடுப்பில் காடாயை வைத்து, அதில்பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்த காடை துண்டை எடுத்து கொதிக்கின்ற எண்ணெய்யில் போட்டு பொறித்து  அதன் மேல் சாட் மசாலா தூவி பரிமாறினால் சுவையான காடை வறுவல் ரெடி.

Categories

Tech |