Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த ருசியான… இந்த ஃபிரைட் ரைஸை… ட்ரை பண்ணி பாருங்க..!!

சைனீஸ் ஃபிரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

கேரட்                                          – 1
குடைமிளகாய்                       – 1
வெங்காயம்                             – 1
வெங்காயத்தாள்                   – 1 பிடி
அஜினோமோட்டோ            – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள்     – 1 டீஸ்பூன்
நெய்                                             – 3 டீஸ்பூன்
பாசுமதி அரிசி                         – 200 கிராம்
உப்பு                                             – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கேரட், குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.  பின்பு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை போட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்பு மைக்ரோ வேவ் ஓவனில் உள்ள  பாத்திரத்தில், நெய் ஊற்றி, நறுக்கிய கேரட், குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத்தாள், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஓவனில் முடி வைத்து 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

அதன் பின்பு ஓவனில் வைத்த காய்கறிகள் நன்கு வெந்ததும் தனியாக  எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஓவனில் சில நிமிடங்கள் மூடி, வேக வைக்கவும்.

பிறகு ஓவனில் வைத்த சாதம் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்த காய்கறிகளை போட்டு நன்கு கலந்து மறுபடியும் 2 நிமிடங்கள் ஓவனில் மூடி வைத்து குக் செய்து, அதை ஓவனிலிருந்து எடுத்து சிறிது கிளறி, பரிமாறினால் ருசியான    சைனீஸ் ஃபிரைட் ரைஸ்  ரெடி.

Categories

Tech |