Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்ஸில் செய்த… இந்த சத்தான ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுங்க..!!

ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள் :

தோசை மாவு                – 1 கப்
பொடித்த ஓட்ஸ்          – 1 கப்
பெரிய வெங்காயம்    – 1
தக்காளி                            – 1
கேரட்                                 – 1
பச்சை மிளகாய்            – 1
கொத்துமல்லி               – 1 கைப்பிடி
கறிவேப்பிலை             – 1 கைப்பிடி
பீன்ஸ்                               – 2
குடைமிளகாய்             – 1
முட்டைக்கோஸ்       – அரை துண்டு
உப்பு                                  – 1/2 டீஸ்பூன்
எண்ணெய்                    – 20 மில்லி லிட்டர்

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, ஒன்றாக கலந்து வைக்கவும்.

பின்பு ஓட்ஸை எடுத்து, மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு  தோசை மாவை எடுத்து பொடி செய்த ஓட்ஸை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் தோசைக் கல்லைஅடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  கலந்து வைத்த மாவை ஊற்றி தோசைகளாக சுற்றி நன்கு வேக வைத்து கொள்ளவும்.

பிறகு அதில் வெட்டி வைத்த காய்கறிகளை சிறிதளவு எடுத்து, வேக வைத்த ஊத்தப்பத்தின் மேல் தூவி, அதை சிறிது சிறிது எண்ணெய் ஊற்றி முடி வைத்து,நன்கு  வேக வைத்து, திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக வைக்கவும்.

மேலும் வேக வைத்த உத்தப்பம் நன்கு பொன்னிறமானதும், எடுத்து, சட்னியுடன் பரிமாறினால், சுவையான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ரெடி.

Categories

Tech |