சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் , 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது .
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியானது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் மொத்தம் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் .
திருவனந்தபுரம் மண்டலம் 99.85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விகிதத்தில்முதலிடம் பிடித்துள்ளது. 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், 95.89 சதவீத தேர்ச்சியுடன் அஜ்மீர் மண்டலம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.