ஜப்பான் நிறுவனம் ஒன்று ஆடம்பரமான, வித்தியாசமான மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளது.
கொரோனா எதிரொலியால் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் மாஸ்க் அணிவது என்பது கட்டாயம் ஆகிவிட்டது. மாஸ் என்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு சாதனம். ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. ஆடைக்கு ஏற்ப மாஸ்க் அணிவது, விதவிதமான படங்கள் போட்ட மாஸ்க் அணிவது, அதையும் தாண்டி டிரஸ்க்கு ஏற்ற கலரில் மேட்சாக, சேலைக்கு ஏற்ற கலரில் மேட்சாக மாஸ்க்குகளை தைத்து அணிந்துகொள்வது என்பது ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் தாண்டி மாஸ்க் ஆடம்பரமாகவும் மாறிவிட்டது. ஜப்பான் நிறுவனம் ரூ. 80 லட்சம் மதிப்பில் மாஸ்க் ஒன்றை தயாரித்து வாயடைக்க வைத்துள்ளது. இந்த மாஸ்க் 0.7 கேரட் வைரங்களும், முத்துக்களும் பொறிக்கப்பட்ட பார்ப்பவர்களின் மனதை கவர்ந்து வருகிறது.