வரலாற்றிலே முதன்முறையாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ஆம் தேதி அல்லது 15 ஆம் தேதியில் வரும் தமிழர் திருநாளான தை பொங்கல், காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மகர சங்கராந்தி,பிஹு என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு வரும் 2021 ஆம் வருடம் ஜனவரி 14 மற்றும் 15 தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு கூட உச்சநீதிமன்றம் இயங்கும்.
ஆனால் தற்போது வரலாற்றில் முதல்முறையாக பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருடத்தில் 196 நாட்கள் மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்கும். மீதமுள்ள 120 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இஸ்லாமியர் பண்டிகைகளான பக்ரீத், ரம்ஜான் பண்டிகைக்கு கூட இரண்டு முறை விடுமுறை விடப்படும் நிலையில், தமிழர் திருநாளான பொங்கலுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று பல நாட்களாக வைத்த கோரிக்கை இந்த வருடம் தான் நிறைவேறியுள்ளது.