மு.க. ஸ்டாலின் , இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார் .
தூத்துக்குடி ஸ்பிக் நகரில் , திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் , ”ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் யாரும் இல்லை” என புகழ்ந்தார் .
அதோடு, மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வரலாம். அதற்க்கான வாய்ப்பு அதிகமுள்ளது எனவும் கூறினார்.