Categories
உலக செய்திகள்

இன்ஸ்டாகிராமில் விலையுயர்ந்த பொருட்கள்…. வெளியிட்ட பெண்…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!

பட்டப்பகலில் பெண் ஒருவரின் வீட்டில் பல விலையுயர்ந்த பொருட்கள் மர்ம நபர்களால்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பட்டப்பகலில் துணிகரமாக கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முகமூடி அணிந்த மூன்று பேர் வீட்டினுள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ள இந்த விவகாரம் தொடர்பில் So mei -yan(25) கூறுகையில், “திடீரென்று வீட்டிற்குள் புகுந்த மூன்று கும்பல் சுமார் 400 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களுடன் வெளியே தப்பித்து சென்றனர். சம்பவத்தின் போது நானும்,என்னுடைய 6 மாத குழந்தையும் மட்டும் தான் இருந்தோம்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அனைத்தும் உண்மையானது தான் என்று உறுதியாகியுள்ளது.

கொள்ளையர்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே So mei -yan காவல்துறைக்கு  தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சோதனையிட்டபோது சந்தேகப்படும்படியான நபர்கள் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் நடந்த சம்பவம் நடந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

தற்போது அந்த மூவரின் படங்களை வெளியிட்ட காவல்துறையினர் கொள்ளையர்கள் சீனர்கள் என்று அறிவித்துள்ளனர். அதேசமயம் So mei -yan தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை தான் சேகரித்து வைத்துள்ள விலையுயர்ந்த பொருட்களை மொத்தமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது கொள்ளைக்கு காரணமாக அமைந்திருக்கலாமா? என்று காவல்துறையினர் சந்தேகித்து வருகின்றனர். இதையடுத்து கொள்ளையர்கள் தொடர்பாக உறுதியான தகவல் தருபவர்களுக்கு சன்மானமாக 194 ஆயிரம் பவுண்டுகள் தருவதாக So mei -yan இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Categories

Tech |