Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே ? வச்சு செய்த மத்திய அரசு ….. புலம்பும் தமிழக அரசு …!!

இந்த ஆண்டு ( 2020 – 2021 ) ஆம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் உயர்வு சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்திய மருத்துவ குழுவின் 2000வது ஆண்டில் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி இந்த இட ஒதுக்கீட்டை இந்திய மருத்துவக் குழு ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள் ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அந்த அடிப்படையில் மருத்துவ உயர்வு படிப்புகளில் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தனியார் – அரசு மருத்துவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குதான் இன்றைக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது. அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு தனி ஒதுக்கீடு அல்ல.இதை பல ஆண்டுகளாக தமிழக அரசு கடைபிடித்து வருகின்றது என்று தமிழக அரசு  தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு முறைய,  அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய இந்த விஷயத்தை செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசின் வாத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசினுடைய கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள சுமார் 365 அரசு  மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உயர்கல்வியில் 50 சதவீத உள்ஒதுக்கீடு இல்லை என முடிவாகியுள்ளது. இதனால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் வாதத்தால் தமிழக அரசின் முடிவு தடையாகியுள்ளது

Categories

Tech |