Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வரும் மேலும் 2 புயல்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் மேலும் இரண்டு புயல்கள் உருவாகி உள்ளதால் தமிழகத்திற்கு பெரும் ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. இந்நிலையில் அடுத்த கட்டமாக தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற 29ஆம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. அது புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது டிசம்பர் 2 ஆம் தேதி நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்கள் வழியே கரையை கடக்கும். அதன்பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி மேலும் ஒரு புயல் உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |