Categories
மாநில செய்திகள்

பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு… தமிழக முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பயிர் செய்த பற்றி முழுமையாக கணக்கெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அரசு அறிவுறுத்தலின்படி செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் என்றும் கடலூரின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |