உலக அளவில் எச்ஐவி தொற்றுக்கு கடந்த ஓராண்டில் 3 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் எச்ஐவி தொற்றுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 வினாடிக்கு ஒருமுறை குழந்தை அல்லது 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் ஒருவருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக எச்ஐவி சிகிச்சை தடைபட்டதே இறப்பு விகிதம் அதிகரிப்புக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளது.