உத்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்து போன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம், சாம்பல் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையின் படிக்கட்டின் அடியில் ஸ்ட்ரெச்சரில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் யாரும் இல்லை. அங்கு வந்த ஒரு தெரு நாய் சிறுமியின் உடலை கடித்தது. இந்த காட்சி அங்கிருந்த ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ வைரல் ஆகி அரசு மருத்துவமனையின் அலட்சியத்தை கண்டித்து வருகிறது.
அந்த சிறுமியை மருத்துவமனைக்கு வரும் முன்னே இறந்து விட்டாரா? அல்லது வந்த பின்னர் இறந்தாரா? என்ற விவரம் தெரியவில்லை. உரிய நடைமுறைகளுக்கு பிறகு சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் தெருநாய் தொந்தரவு அதிகம் இருப்பதால் இதுபற்றி அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என குடும்பத்தினர் கூறினர். அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் உடலை எடுத்துச் சென்றனர். நாய் வந்து கடித்தபோது அதனை அவர்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம்’ என மருத்துவமனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் கூறியதாக மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கட்சி வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வார்டு பாய் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாகவும், விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
संभल में स्वास्थ्य सेवाओं की रोंगटे खड़े कर देने वाली खौफनाक तस्वीर आई सामने।जिला अस्पताल में स्वास्थ्य कर्मियों की लापरवाही की वजह से स्ट्रेचर पर रखे बच्ची के शव को कुत्तों ने नोच कर खाया। जांच करा लापवाही बरतने वालों के खिलाफ हो सख्त कार्रवाई। शोकाकुल परिवार के प्रति संवेदना! pic.twitter.com/3tgEHCTQpb
— Samajwadi Party (@samajwadiparty) November 26, 2020