புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி நிவாரண உதவிகளை வழங்கி வந்தேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இரண்டாவது நாளாக இன்றும் நேரில் சென்று சந்தித்தேன்.
புயலால் பல பகுதி மக்கள் தத்தளிக்கின்றன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்து, எத்தகைய பேரிடரிலும் மக்களுக்கு உதவிட திமுக இருக்கிறது என ஆறுதல் சொல்லி நிவாரண உதவிகளையும் வழங்கி வந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.