நாடு முழுவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதிலும் வருகின்ற கல்வி ஆண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிரிடும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைமுறைகளை வகுத்த ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின் படி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி மக்கள் அனைவரும் இதனை வரவேற்றுள்ளனர்.