புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசிடம் உள்ளது போல் எங்களிடம் கஜானா இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மைய கட்சியின் சார்பாக முடிந்த உதவிகளை செய்துள்ளோம்.
ஆனாலும் தொடர்ந்து அரசுதான் முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிற்கின்றனர். அரசிடம் உள்ளது போல் எங்களிடம் கஜானா இல்லை. ஆகவே அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.