Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்துக்கு – 48 மணிநேரத்தில்…. அடுத்த எச்சரிக்கை……!!

வங்கக்கடலில் வரும் 48 வயதில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு சற்று தீவிரம் அடைந்து தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிவர் புயலானது இதேபோல வங்க கடலில் உருவாகி தமிழகம் நோக்கி வந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் சற்றும் குறையவில்லை. அது அப்படியே இருக்கின்ற காரணத்தால் தான் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருக்கின்றது.இதன் காரணமாக தொடர்ந்து தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |