பெங்களூருவில் சிறுமியை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் கோவிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவிலுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பூசாரி வெங்கடரமணப்பா உணவுப்பொருள்களை வாங்கி தருவதாக ஆசை காட்டி கோவிலுக்குள் வரவழைத்து சிறுமியை வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிசிடிவி காட்சிகள், சிறுமியின் மருத்துவ அறிக்கை, பூ விற்கும் பெண் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.