பிரபல நடிகர் ராஜ்கிரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ராஜ்கிரண் ‘ராசாவே உன்ன நம்பி’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தடம் பதித்தவர் . இதையடுத்து ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார் . இவரது கம்பீரமான தோற்றத்தால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவர் நீண்ட தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.