Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BigAlert: தமிழகத்தை நோக்கி 48 மணிநேரத்தில் புதிய புயல் – மீண்டும் எச்சரிக்கை …!!

தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

9 ஏற்கனவே வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைத்து. சில இடங்களில் சேதாரம் ஏற்பட்டன. இதன் தாக்கம் தற்போதும் இருந்து வரும் நிலையில் அதற்குள் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களை உஷார் படுத்தி உள்ளது.

Categories

Tech |