ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவர் பரோல் மூலம் வெளியில் வந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.