Categories
மாநில செய்திகள்

“முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி” இன்று மாலை 5 மணிக்கு திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை…!!

பூண்டி ஏரி இன்று மாலை 5 மணிக்கு திறந்து விடப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து ஏரிகளும் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பியுள்ளது. இதனால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏரிகள் திறந்து விடப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்னும் ஊர் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

இந்த பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணி முதல் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள மக்களுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மதுராந்தகம் ஏரியும் நிரம்பியுள்ளதால் உபரி நீர் கலிங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்ற அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |