ஜனாதிபதி ட்ரம்ப் பெரிய அளவில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இவர்களை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை முழுமையாக ஒப்புக் கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தார். இந்நிலையில் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வெற்றி பெற்றதாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் இசைவு தெரிவித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் பைடனின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார். இந்நிலையில் வருகிற 20-ஆம் தேதி பல்வேறு விஷயங்கள் நடக்கும் என்று நான் நினைக்கிறேன். பெரிய அளவில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். இதனால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் நீடிததுக் கொண்டே இருக்கிறது.