Categories
தேசிய செய்திகள்

அனாதையான 16 வயது சிறுமி “உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”… சாதகமாக பயன்படுத்திய காமக்கொடூரன்..!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு அனாதை சிறுமியை ஆறுமாதம் கர்ப்பமாக்கிய கொடுமை நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் குராரில் வசிக்கும் 16 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அவரின் பெற்றோர் இறந்து போனதால் அவருக்கு பாட்டியை தவிர சொல்வதற்கு உறவு என்று யாரும் இல்லை. அதனால் பாட்டியுடன் வசித்து வந்த அந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டில் 73 வயது முதியவர் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த முதியவரின் குடும்பத்தோடு அந்த பாட்டியும், பேத்தியும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

பாட்டி இறக்கும் தருவாயில் அந்த முதியவரிடம் தங்கள் மகன்களில் ஒருவருக்கு தனது பேத்தியை திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். பாட்டி இறந்ததும் அந்த பெண் முதியவரின் வீட்டிலேயே தங்கி உள்ளார். அவர் அந்த முதியவரின் வீட்டில் இருந்த அனைத்து வேலைகளும் செய்து வந்துள்ளார். முதியவரின் மகன் ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் காரணமாக அந்த பெண் ஆறு மாதம் கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பமான விஷயம் அந்த பெண்ணிற்கே தெரியவில்லை என்பதுதான் துயரம்.

அந்த வீட்டில் இருந்தால் மற்றவருக்கும் அந்தப் பெண் கர்ப்பம் என்பது தெரியவில்லை. அந்தப் பெண்ணிற்கு ஒரு நாள் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டறிந்தார்கள். அவர்கள் போலீசுக்கு தகவல் அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அந்த வீட்டில் இருந்த வாலிபர் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார். அதன்பிறகு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |