Categories
மாநில செய்திகள்

வலுப்பெற்றது அடுத்த புயல்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நோக்கி நகரும்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

அதன்பிறகு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகரும். மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |