பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடுத்திருப்பது தீய உள்நோக்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இடித்ததை எதிர்த்து நடிகை கங்கனா ரானாவத் தொடுத்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா ரானாவத்துக்கு 7 மற்றும் 9-ம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டிசை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்குவது குறித்து மதிப்பீட அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அதிகாரி அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. சமூக வலைத்தளத்தில் பிறரைப் பற்றி கருத்து பதிவிடுகையில் கட்டுப்பாடுடன் நடிகை கங்கனா ரானாவத் நடக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.