தமது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா மற்றும் கலைஞர் நினைவு இடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.