புதிதாக தமிழகத்தை தாக்க இருக்கும் புயலுக்கு பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நிவர் புயலாக மாரி தற்போது கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மரங்கள் வேரோடு விழுந்துள்ளன.
இந்த புயலினால் ஏற்பட்ட ஈரமே இன்னும் காயத்தை நிலையில், தற்போது மீண்டும் ஒரு புயல் தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீளுமிந்த புயலானது நவம்பர் 29 – டிசம்பர் 3-ஆம் தேதி வரை இடைப்பட்ட காலத்தில் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலுக்கு “புரேவி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புயல் உறுதியாக உருவாகுமா என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வரை இந்த பெயரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.